முன்னாள் எம்.பி வீட்டின் முன்னால் நேற்று இரவு பதற்றம்
முன்னாள் எம்.பி வீட்டின் முன்னால் நேற்று இரவு பதற்றம்
அக்கரைப்பற்றில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனா வின் வீட்டுக்கு முன்னால் டயர் எரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது. இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் “கோட்டா கோ ஹோம் கம” மீது இடம்பெற்ற தாக்குதலை அடுத்து மகிந்த ராஜபஷ மற்றும் ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களது வீடுகள் மற்றும் காரியாலயங்களை தீக்கிரையாக்கப்ட்டுவரும் நிலையில்
அக்கரைப்பற்று சாகாம வீதியிலுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனை கட்சியின் அமைப்பாளருமான பொடியப்பு பியசேனவின் வீட்டிற்கு முன்னால் ஒன்று திரண்ட இளைஞர்கள் வீதியில் டயர்களை போட்டு தீயிட்டதையடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
No comments: