KING FM TAMIL

KING FM TAMIL NEWS

நெருக்கடிக்கு மத்தியிலும் மத்திய வங்கி ஆளுநரை சந்தித்த எதிர்கட்சி தலைவர்

 

நெருக்கடிக்கு மத்தியிலும் மத்திய வங்கி ஆளுநரை சந்தித்த எதிர்கட்சி தலைவர் ..........நெருக்கடிக்கு மத்தியிலும் மத்திய வங்கி ஆளுநரை சந்தித்த சஜித்!


இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போதைய தேசிய நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் திறைசேரியின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தனவும் கலந்துகொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த நெருக்கடியை சமாளிக்க தனது கட்சி எப்போதும் தனது ஆதரவை வழங்கி வருகிறது என எதிர்கட்சி தலைவைர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

"இந்த நெருக்கடியை சமாளிக்க நாங்கள் எப்போதும் எங்கள் தளராத ஆதரவை வழங்குகிறோம். மத்திய வங்கி ஆளுநர் மற்றும் கருவூல செயலாளருடன் இறுதியாக ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்துவது நல்லது. எந்தவொரு நெருக்கடியைத் தூண்டுபவர்களுடனும் பணிபுரியாமல் இருக்கும் வரை எந்தவொரு பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம், ” என்று அவர் தனது டுவிட்டர் தளத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.