KING FM TAMIL

KING FM TAMIL NEWS

பொலிஸார் கோட்டா கோ கம போராட்டகாராகளுக்கு மத்தியில் பொலிஸ் ஆற்றிய உரை

 பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கோட்டா கோ கம போராட்டக்காரர்களுக்கு மத்தியில் ஒலிபெருக்கி மூலம் உரையாற்றிய  பொலிஸார், நாட்டில் கடந்த 6ஆம் திகதி முதல் அவசரகாலச் சட்டமும் நேற்று முன்தினம் முதல் நாளை காலை வரை ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்தக் காலப்பகுதியில் மைதானம், கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் ஒன்றுகூடுவது சட்டவிரேதமாகும் என தெரிவித்த பொலிஸார், எனவே, பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.


No comments:

Powered by Blogger.