ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று பிரதேசங்களிலும் பாதுகாப்பு தரப்பினர் தமது ரோந்து நடவடிக்கை
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினர் தமது ரோந்து நடவடிக்கை மற்றும் சோதனை நடவடிக்கையினை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இன்று அக்கரைப்பற்று மத்திய மணிக்கூட்டுக் கோபுர பகுதியில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேவேளை, ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று பிரதேசங்களிலும் பாடசாலைகள் அரச அரசார்பற்ற நிறுவனங்கள் வங்கிகள் வியாபார நிலையங்கள் என்பன மூடப்பட்டிருந்ததுடன் வீதிகளும் வெறிச்சோடிக்காணப்பட்டன.
இந்நிலையில் இன்று திறக்கப்பட்டிருந்த ஒருசில வர்;த்தக நிலையங்கள் பொலிசாரின் தலையீட்டை அடுத்து மூடப்பட்டன.
காலிமுகத்திடல் சம்பவத்தை அடுத்து ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, நாட்டின் பலபாகங்களிலும் பொலிஸார் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: