KING FM TAMIL

KING FM TAMIL NEWS

முன்னாள் பிரதமர் இருப்பிடம் அறிவிக்கப்பட்டது


 



முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ திருகோணமலை கடற்படை தளத்துக்கு தற்காலிகமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.


அத்துடன், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையில் இருந்த போது ஆயிரக்கணக்கானவர்களினால் சுற்றிவளைக்கப்பட்டிருந்ததாகவும், அவரைப் பாதுகாக்கும் விதமாக தற்காலிகமாக குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, இன்னும் ஓரிரு நாட்கள் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ திருகோணமலை கடற்படை தளத்தில் தங்கவைக்கப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Powered by Blogger.