சபாநாயர் வெளியிட்ட முக்கிய அறிவித்தல்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை உறுதி செய்த பின்னரே நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்ககையினை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாளைய தினம் நடைபெறவிருந்த கட்சி தலைவர்களுக்கான கூட்டம் மறு அறிவிப்பு வரை இரத்து செய்யப்பட்டுள்ளாகவும் சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments: