KING FM TAMIL

KING FM TAMIL NEWS

பட்டாசு கொளுத்தி புதிய பிரதமரை வரவேற்ற மட்டக்களப்பு மாவட்ட கட்சி ஆதவாளர்கள்

 ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து மட்டு மாவட்டத்தில் அவரது கட்சி ஆதவாளர்களால் இன்று மணிக்கூட்டு கோபுரத்தடியில் அவருக்கான வரவேற்பு பதாதைகள் கட்டப்பட்டு அதன் பின் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மட்டக்களப்பு மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் முகாமையாளர் கே. லிங்கராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





No comments:

Powered by Blogger.