KING FM TAMIL

KING FM TAMIL NEWS

யாழ் அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் இராணுவம் குவிப்பு

யாழ் அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் இராணுவம் குவிப்பு.........

யாழ் அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்களுக்கு முன்னால் இராணுவம் குவிப்பு

 யாழ்.மாவட்டத்திலுள்ள அரசியல் பிரமுகர்களின் அலுவலகங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தில் தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மையினை அடுத்து அரசியல் பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான விடுதிகள் போராட்டக்காரர்களினால் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்நிலையில் இன்றும் அந்த பதற்றநிலை காணப்படும் பட்சத்தில் யாழிலுள்ள அங்கஜன் ராமநாதன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது அலுவலகங்களுக்கு பாரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அலுவலகங்களைச் சூழ காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Gallery

No comments:

Powered by Blogger.