KING FM TAMIL

KING FM TAMIL NEWS

முன்னாள் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.....


இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படும்!! - சந்திரிக்கா கடுமையான எச்சரிக்கை

 தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.


ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த சில வாரங்களாக அலரிமாளிகைக்கு அருகாமையிலும், கொழும்பு காலிமுகத்திடலிலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியதை அடுத்து நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ருவிட்டரில் பதிவிட்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

“நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக அற்புதமான போராட்டத்தை நடத்தி வரும் அனைத்து குடிமக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு நாசகாரர்கள் பயன்படுத்தப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தயவு செய்து இதை நிறுத்த உங்கள் திறமையைப் பயன்படுத்தவும்” என பதிவிட்டுள்ளார்.

No comments:

Powered by Blogger.