ரணிலுக்கு எதிராக திரும்பும் அரசியல் கட்சிகள்…
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கபோவதில்லை என பல்வேறு அரசியல் கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.
இதன்படி, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவு தெரிவிக்க போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டார்.
இதேவேளை, சுயாதினமாக செயற்படும் 11 கட்சிகளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கபோவதில்லை என தெரிவித்துள்ளன.
இதன்படி, விமல்வீரவன்ச, உதயகம்பன்பில, வாசுதேவ நானயக்கார ஆகியோர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியோரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கபோவதில்லை என குறிப்பிட்டுள்ளன.
இந்த நிலையில், நாடாளுமன்ற சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகயை முன்னெடுக்க்பட வேண்டுமன அனைத்து தரப்பினரும் குறிப்பிட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பை ஏற்றுக்கொள்ள போவதில்லை என சர்வமத தலைவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த நிலையில், இலங்கை தொழிலாளர் காங்ரஸ் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவு மாத்திரமே தற்போதைய நிலையில் காணப்படுகின்றது.
இதன்படி, கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலையில் பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: