KING FM TAMIL

KING FM TAMIL NEWS

முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள்

 


இலங்கையில் சமுக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ருவிட்டர்,முகநூல் மற்றும் வட்ஸ் அப் ஆகியவற்றின் செயற்பாடுகள் இன்றிரவு செயலிழந்துள்ளன.


விலைவாசி உயர்வால் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்கள் தாமாக முன்வந்து அரசுக்கெதிரான போராட்டங்களை பரவலாக முன்னெடுத்து வரும் நிலையில் அரசாங்கம் இன்றையதினம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.


அத்துடன் ஊரடங்கு காலத்திலும் சமுக ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் பரிமாறப்படலாம் என்ற தகவலை அடுத்து அவற்றை அரசாங்கம் முடக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

No comments:

Powered by Blogger.