KING FM TAMIL

KING FM TAMIL NEWS

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

 


பால் தேனீரின் விலையை 100 ரூபாய் வரை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


நிலவும் சூழ்நிலையில் உணவகங்களில் பால் தேனீர் விற்பனை செய்வதை நிறுத்த நேரிடும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார்.


இதனிடையே உள்நாட்டு பால் மாவின் விலையை அதிகரிக்க எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை கால்நடை வள ராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.


தேசிய பால் மா உற்பத்தி அதிகரிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


எவ்வாறாயினும் இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மாவின் விலை நேற்று முதல் 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. இதன்படி 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை 790 ரூபாயாக அதிகரித்துள்ளது. 

No comments:

Powered by Blogger.