வானிலை அறிக்கை
நாளை வரை தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியின் மத்திய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் கடற்தொழில் சமூகங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மார்ச் 19 காலை 08.30 மணிக்கு தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் மையம் கொண்டு வடக்கு நோக்கி நகர்ந்து வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 20 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு நிலையால் சூறாவளி உண்டாகி 21 ஆம் திகதி அது புயலாக மாறும் ஆகையால் நாட்டில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் மக்கள் அனைவரையும் எச்சரிக்கையாக இருக்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்
No comments: