KING FM TAMIL

KING FM TAMIL NEWS

மின் தடை தொடர்பான அறிவிப்புகள்

 நாட்டில் நாளைய தினம் (18) மேற்கொள்ளப்படவுள்ள மின்துண்டிப்பு தொடர்பான தகவலை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.


அந்தவகையில், A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களிற்குட்பட்ட பகுதிகளுக்கு சுழற்சி முறையில் காலை எட்டு மணி தொடக்கம் மாலை ஆறு மணி வரையான காலப்பகுதியில் மூன்று மணித்தியாலங்களும் இருபது நிமிடங்களும்,


மாலை ஆறு மணி தொடக்கம் இரவு பதினொரு மணி வரையான காலப்பகுதியில் ஒருமணித்தியாலங்களும் நாற்பது நிமிடங்களுக்கும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


அதேபோன்று, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களிற்குட்பட்ட பகுதிகளுக்கு காலை ஒன்பது மணி தொடக்கம் பிற்பகல் ஐந்து மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் இரண்டு மணிநேரமும்,


மாலை ஐந்து மணி தொடக்கம் இரவு பத்து மணிவரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் பதினைந்து நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்....



No comments:

Powered by Blogger.