KING FM TAMIL

KING FM TAMIL NEWS

ஐனாதிபதியின் அழைப்பை ஏற்றார் எதிர் கட்சி தலைவர்

 


சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.


சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளார்.

இதுதொடர்பில் ஆளும் தரப்பிலுள்ள கட்சிகளுடன் ஜனாதிபதி பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.


அத்துடன், எதிர்கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார் என்பதுக் குறிப்பிடத்



தக்கது.

No comments:

Powered by Blogger.