KING FM TAMIL

KING FM TAMIL NEWS

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கப் போகும் நைஜீரிய விமானம்! காரணம் வெளிவரவில்லை

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கப் போகும் நைஜீரிய விமானம்! காரணம் வெளிவரவில்லை..............


திட்டமிடப்படாத வகையில் நைஜீரியாவில் இருந்து இலங்கைக்கு விமானம் ஒன்று வருகைத் தரவுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த விமானம் இன்று (10)  அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. 

நைஜீரியாவில் இருந்து  B.Sc4024 என்ற விமானமே இவ்வாறு இலங்கைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எனினும் இந்த திடீர் விமானத்தின் வருகையின் நோக்கம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தமது குடும்பத்தாருடன் நாட்டை விட்டுச் செல்வதற்கு தயாராவதாகவும், அதற்காக கொழும்பு ஐந்து விமானங்கள் மற்றும் எட்டு விமானிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




No comments:

Powered by Blogger.