KING FM TAMIL

KING FM TAMIL NEWS

பாடசாலை மணித்தியாலங்களில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானம்

 


அடுத்த தவணையிலிருந்து பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.


இந்த ஆண்டுடன் (2022) தொடர்புடைய பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு 139 நாட்கள் கால அவகாசம் காணப்படுகின்றது.


இந்த நிலையில், பாடசாலை நேரத்தை ஒரு மணித்திலாயம் வரை நீட்டிப்பதன் மூலம் கற்பித்தலுக்கான காலத்தை கூடுதலாக வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.


கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட பின்னரும் பாடத்திட்டத்தை உள்ளடக்க முடியாத பட்சத்தில், மூன்றாம் தவணையின் போது, சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவது குறித்தும் கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

No comments:

Powered by Blogger.