KING FM TAMIL

KING FM TAMIL NEWS

யாழ் போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக தற்காலிக இடை நிறுத்தப்பட்ட கண் சத்திர சிகிச்சை பிரிவு

 


யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் வைத்தியர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.


கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளன. அதனால் மருந்துப் பொருட்களுக்கான கோரிக்கை முன்வைத்துள்ளோம்.


அவை கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.